தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33).
இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.