Dec 13, 2025
Thisaigal NewsYouTube
நடிகை கடத்தல் வழக்கு.. திலீப் விடுதலை, 6 பேருக்கு தண்டனை அறிவிப்பு
சினிமா

நடிகை கடத்தல் வழக்கு.. திலீப் விடுதலை, 6 பேருக்கு தண்டனை அறிவிப்பு

Share:

பிரபல நடிகையைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் 8வது குற்றவாளியாக அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

முதல் குற்றவாளியான பல்சர் சுனி என்கிற சுனில் உட்பட 6 பேர் குற்றவாளி எனவும் நீதிமன்றம் அறிவித்து இருந்த நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

6 பேருக்கான தண்டனையை நீதிபத்தில் ஹனி வர்கீஸ் அறிவித்தார். நடிகையைக் கடத்தி வன்கொடுமை செய்த குற்றத்தை நேரடியாகச் செய்த 6 பேருக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்.  

திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேலுமுறையீடு செய்ய கேரள அரசு முடிவெடுத்து இருக்கிறது.

Related News