Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மோலிவுட் உலகில் கால்பதிக்கும் மாஸ் கோலிவுட் நடிகர்
சினிமா

மோலிவுட் உலகில் கால்பதிக்கும் மாஸ் கோலிவுட் நடிகர்

Share:

இந்தியா, ஏப்ரல் 06-

மலையாள நடிகராக இருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் தான் ஃபஹத் ஃபாசில். இந்நிலையில் அவருடன் ஒரு மலையாள படத்தில் இணையவுள்ளார் ஒரு டாப் தமிழ் நடிகர்.

தமிழ் மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஃபாசில் அவர்களின் மகன் தான் பகத் பாசில். கடந்து 2002ஆம் ஆண்டு முதல் இவர் திரைத்துறையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் "வேலைக்காரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்", "விக்ரம்" மற்றும் "மாமன்னன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஃபஹத் தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "வேட்டையன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தபடியாக அவருடைய நடிப்பில் மலையாள மொழியில் உருவாகும் ஒரு படத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்து வரும் "நடிப்பு அரக்கன்" எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு மாபெரும் நடிகர்கள் முதல் முறையாக ஒரு மலையாள திரைப்படத்தில் இணையுள்ளார்கள். அதேபோல எஸ்.ஜே. சூரியா அவர்களுக்கு இதுதான் முதல் மலையாள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News