லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமா ரசிகர்களால் இப்போது கொண்டாடப்படும் ஓர் இயக்குநராக இருக்கிறார். மாநகரம் என்ற படம் மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றவர் கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இப்படம் சுதந்திர தினச் சிறப்பாக வெளியானது. இதுவரை படம் ரூ. 500 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
தற்போது லோகேஷ் கனகராஜின் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது. ஆனால் அவர் இயக்கும் படம் பற்றி இல்லை.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல் தான் வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். படத்தின் கதைக்கள வேலைகள் நடந்து வருகிறதாம்.
இப்படத்தில் நாயகிகளாக மிர்ணா மேனன் மற்றும் கே.சுதா ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.