Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நல்ல மருந்துக்காக அஜித் தேடி அலையும் விஷயங்கள், மன நிம்மதியை கெடுத்து சிக்கலை உருவாக்கிய ஏகே
சினிமா

நல்ல மருந்துக்காக அஜித் தேடி அலையும் விஷயங்கள், மன நிம்மதியை கெடுத்து சிக்கலை உருவாக்கிய ஏகே

Share:

அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் என்ன என கேட்டு ரசிகர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குட் பேட் அக்லி அறிவிப்பு வெளிவந்தது.அது வந்த கையோடு அஜித்தின் அடுத்தடுத்த போட்டோக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் அவர் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் அவர் பிரியாணி சமைக்கும் வீடியோ தான் வேற லெவலில் இருந்தது. இப்படி அஜித் என்ஜாய் செய்வதற்கு சில காரணமும் இருக்கிறது.அதாவது நரம்பு பிரச்சினையின் காரணமாக அவருக்கு சமீபத்தில் சிகிச்சை நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள் சொன்ன ஒரே அறிவுரை அவர் எக்காரணம் கொண்டும் டென்ஷன் ஆக கூடாது.

அதற்காகவே 2 சீனியர் நர்சுகள் தயார் நிலையில் இருக்கின்றனர். அவர்கள் அஜித்தின் ஹெல்த் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள். மேலும் டென்ஷனை குறைப்பதற்காகவே அவர் பைக், பிரியாணி, நீச்சல் என தன் நேரத்தை செலவழித்து வருகிறார். இதுதான் அவருடைய பிரச்சனையை தீர்க்கக்கூடிய 50% மருந்தாக உள்ளது.

அதைத்தான் அவர் போட்டோவாகவும் வெளியிட்டு வருகிறார். தற்போதைய இந்த பிரச்சனைக்கு காரணம் என்று பார்த்தால் அவருடைய அஜாக்கிரதை தான்.இதற்கு முன்பு அவர் நிறைய விஷயங்களில் கவனம் இல்லாமல் இருந்துவிட்டார். அதனால் வந்த சிக்கலை இப்போது சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஏ கே.

Related News