Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சினிமா

பத்ம பூஷண் விருது பெரும் நடிகர் அஜித் குமார்.. வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Share:

பத்ம பூஷன் விருது பெறவிருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது.

இதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

கடந்த வாரம் பத்ம விருதுகள் பெரும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கலைப் பிரிவில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. பத்ம பூஷன் விருது பெறும் ஐந்தாவது தமிழ் நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது என அறிவித்த பின், அரசியல் பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பத்ம பூஷன் விருது பெரும் அஜித்திற்கு தனது வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

Related News