கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். பின் இறந்தவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், "கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் காணாது போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெறுதுர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனதும் கலங்கி தவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 20 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் ரூ. 2 லட்சமும் நிதியுதவி என விஜய் அறிவித்துள்ளார்.