மூத்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் தனது மகள் வீட்டில் இருந்த பாரதிராஜா, கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள பாரதிராஜா, வயது மூப்பு காரணமாக படங்களை இயக்குவது, நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். இவரது, ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த வேதனையில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








