Jan 16, 2026
Thisaigal NewsYouTube
நடிகர் அஜித்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி
சினிமா

நடிகர் அஜித்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி

Share:

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி பயணித்து வருபவர்.

சில நாட்களுக்கு முன் அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. விருது வாங்கிய அஜித் சென்னையில் திரும்பிய போது கொடுத்த பேட்டியில், எனக்கு இவ்விருது கிடைக்க ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக் கூறியிருந்தார்.

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியும், தனது கணவர் விருது வாங்கியது பெருமையான விஷயம் எனக் கூறினார். தங்களது ஆசை நாயகனுக்கு விருது கிடைத்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க ஒர் அதிர்ச்சி தரும் தகவல் வந்துள்ளது.

அதாவது நடிகர் அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். தனது உடல்நலப் பரிசோதனைக்காக அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related News