Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்ட்ரோ வானவில் ‘சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா’
சினிமா

ஆஸ்ட்ரோ வானவில் ‘சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா’

Share:

கோலாலம்பூர், டிசம்பர் 8, 2022 – டிசம்பர் 12, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா எனும் நேரலை உள்ளூர் தமிழ் இன்ஃபோடெயின்மென்ட் உரை நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகப் பிரிவு உதவித் துணைத் தலைவர் (ஆஸ்ட்ரோ வானவில்), பிரேமலதா நாராயணன் கூறுகையில், “எங்களின் உள்ளூர் இரசிகர்களுக்குத் தொடர்புடையப் பல்வேறுத் தலைப்புகளைச் சித்தறிக்கும் புதிய உள்ளடக்கத்தை ஆராய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் தரமான உள்ளூர் உரை நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் இரசிப்பார்கள் என்று நம்புகிறோம்.

புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களான ஆனந்தா மற்றும் உதயா தொகுத்து வழங்கும் சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா, தற்போதைய உள்ளூர் மற்றும் சர்வதேசப் புதுப்பிப்புகள்; நேர்காணல்கள், பல்வேறு வளர்ந்து வரும் மற்றும் பிரபலமான உள்ளூர் மற்றும் சர்வதேசத் திறமையாளர்களை ஈடுப்படுத்தும் படைப்புகள் மற்றும் விளையாட்டுகள்; ஜெமிங் அங்கங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளைச் சித்தறிக்கும். விரைவுக் கேள்விகள், கருத்துக்கணிப்புகள், புதிர்கள் போன்றப் பல வேடிக்கையான, ஊடாடும் விளையாட்டு அங்கங்களில் இரசிகர்கள் பங்கேற்று வீட்டிற்குச் சுவாரஸ்சியமானப் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளைப் பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மருத்துவத் தொழில்நுட்பம், தொழில்நுட்பத் திறன்கள், ஃபேஷன், தொடக்க வணிகங்கள், சமூகம், வீட்டு அலங்காரம், நடனம் மற்றும் பல்வேறுத் தலைப்புகளில் பயனுள்ளத் தகவல்களை வழங்கும் குறுகியக் காணொளிகளும் இவ்வுரை நிகழ்ச்சியில் இடம்பெறும்.

சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா உரை நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்கள் வார நாட்களில் இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணும். ஒவ்வொரு செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கும், ஒவ்வொரு சனி காலை 9 மணிக்கும் வாடிக்கையாளர்கள் மறுஒளிபரப்பைக் கண்டு மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Related News