இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம்.
இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.