தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி படம் வசூல் வேட்டை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தல் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இப்படத்தின் பொள்ளாச்சி படப்பிடிப்புத் தளத்தில் ஸ்ரீலீலாவுடன் ராணாவும் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இதனை உறுதிப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.