Oct 18, 2025
Thisaigal NewsYouTube
படையப்பா நீலாம்பரியாக முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லை
சினிமா

படையப்பா நீலாம்பரியாக முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லை

Share:

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரம் ரஜினிக்கு இணையாக பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இப்படம் தான் ரம்யா கிருஷ்ணன் உச்சம் தொடக் காரணமாக அமைந்தது. இப்படத்தில் அவரது கேரக்டர் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இந்த கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வான நடிகை அவர் இல்லை.

இந்த கதாப்பத்திரத்தில் முதலில் நடிகை மீனா தான் நடிக்க இருந்தார். அந்த நேரத்தில் பாசிட்டீவான கேரக்டரில் நடித்து வந்ததால், நெகடீவ் கேரக்டர் வேண்டாம் என்று முடிவு செய்து அதில் நடிக்கவில்லை என்று மீனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Related News