தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகப் புகழ் பெற்ற நடிகராக மாறியுள்ளார் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மே ஆகிய மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து தற்போது D54 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக D55 மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், இந்த புகைப்படத்தில் உடல் எடை கூடியிருக்கிறார் தனுஷ்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட நம்ம தனுஷா இது என கேட்டு வருகிறார்கள்.








