Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் வில்லன் ரோலில் விஜய் பட நடிகர்
சினிமா

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் வில்லன் ரோலில் விஜய் பட நடிகர்

Share:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் ‘மதராஸி’ படத்தின் கதைக் களம் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், கஜினி படம் போலவே மதராஸி படமும் ஒரு பழி வாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப் புள்ளியாக இருக்கும்.

துப்பாக்கி பட நடிகர் வித்யூத் ஜாம்வால், இந்தியில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கக் கேட்ட போது மறுத்து விட்டார்.

ஆனால், நான் ‘மதராஸி’ படத்திற்காக அவரை அணுகிய போது, கதை என்னவென்றாலும் நடிக்கிறேன் என்று கூறினார். இவருடைய ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Related News