Oct 20, 2025
Thisaigal NewsYouTube
"சங்கர் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்".. 3 டாப் ஹீரோக்களை வைத்து பிளான் போட்ட சங்கர்  பின் கைவிட்டது ஏன்?
சினிமா

"சங்கர் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்".. 3 டாப் ஹீரோக்களை வைத்து பிளான் போட்ட சங்கர் பின் கைவிட்டது ஏன்?

Share:

இந்தியா, ஜுன் 28-

எதிர்வரும் ஜூலை மாதம் சங்கரின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தனது கனவு திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார் சங்கர்.

அண்மையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக "காந்திய வழியில் நீங்கள் போராடுங்கள்.. நேதாஜி வழியில் நான் போராடுகிறேன்" என்று கூறி இந்தியன் தாத்தா பேசும் வசனம் தற்பொழுது ட்ரெண்டாகி வருகின்றது.

இந்நிலையில் இந்தியன் 2 பட ப்ரொமோஷனல் ஈடுபட்டுள்ள இயக்குனர் சங்கர் அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்ட ஒரு திட்டத்தைப் பற்றி மனம் திறந்து இருக்கிறார். அவர் இயக்கி வெற்றி கண்ட மூன்று பிரம்மாண்ட படங்களின் நாயகர்களை ஒரே படத்தில் ஒன்றிணைக்க அவர் விரும்பியதாக கூறியிருக்கிறார். அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ரோபோ பட படப்பிடிப்பின்போது, தனக்கு ஒரு யோசனை தோன்றியதாக கூறியுள்ளார். அதாவது ஹிந்துஸ்தானி சேனாபதி, ஒரு நாள் முதல்வர் புகழேந்தி மற்றும் கருப்பு பணத்தை ஒழித்து அதில் கல்வி தந்த சிவாஜி ஆகிய அனைவரும் ஒரே படத்தில் இணைவது குறித்த தனது உதவி இயக்குனர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அது சாத்தியமில்லை என்று கூறி, வரவேற்பு தராத நிலையில், அதை ஷங்கரும் கைவிட்டதாக கூறியுள்ளார்.

Related News