ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.
இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக படப்படிப்புக்காக காரில்
பணகுடிக்கு வரும் நடிகர் ரஜினியை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடையே கை அசைத்தபடியும், கை குலுக்கியபடியும் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று 4-வது நாள் படப்படிப்பு நடக்கிறது. 3 நாட்கள் மட்டுமே அங்குள்ள தள ஓடு தொழிற்சாலையில் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில்
கூடுதல் காட்சிகளுக்காக இன்று மேலும் ஒருநாள் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.