சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது அதன் விளம்பரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருக்க வேண்டியது என்கிற தகவலைக் கூறி இருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க என்னைத்தான் அணுகினார்கள்.
சிவகார்த்திகேயன் அழைத்தார், கதையும் பிடித்து இருந்தது. ஆனால் அதில் நடித்தால் கூலி படம் பாதிக்கப்படும் என்பதால் நடிக்கவில்லை என லோகேஷ் கூறி இருக்கிறார்.
அந்த கதாப்பாத்திரத்தில் தற்போது ரவி மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.