ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்புப் பணிகள் கேரளா பகுதியில் நடைபெற்றது.
படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். மேலும் இந்த வரிசையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா சேர்ந்துள்ளார். கில்லர் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.