இந்தியா, மே 29-
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில், தான் அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்படுவதாக கூறி இருக்கிறார்.
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவர் தமிழிலும் விஜய் நடித்த மாஸ்டர் பீஸ் படமான காதலுக்கு மரியாதை உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவரது மகனான பகத் பாசில் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் செம்ம பிசியாக நடித்து வருகிறார் பகத் பாசில்.

தமிழில் கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி இருந்தார் பகத் பாசில் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர மாரீசன் என்கிற திரைப்படமும் பகத் பாசில் கைவசம் உள்ளது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருக்கிறார் பகத் பாசில்.
இதுதவிர தெலுங்கு அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் பகத் பாசில். சுகுமார் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படி தென்னிந்திய திரையுலகில் செம்ம பிசியான நடிகராக வலம் வரும் பகத் பாசில், தனக்கு உள்ள அரியவகை நோய் பற்றி முதன்முறையாக விழா ஒன்றில் பேசி இருக்கிறார்.

நடிகர் பகத் பாசில் கடந்த ஞாயிறன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவரிடம், ADHD எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மருத்துவர், சிறுவயதிலேயே கண்டறியப்பாட்டால் அதை குணப்படுத்துவது எளிது என கூறினாராம்.
பின்னர் 41 வயதுள்ளவருக்கு ADHD இருந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியுமா என பகத் பாசில் கேட்டதன் மூலம் அவருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ADHD என்பது நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடு. இது இருப்பவர்கள் அதிக மறதி கொண்டவர்களாகவும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக கருதாவர்களாவும் இருப்பார்களாம். இந்த அரியவகை நோய் பாதிப்பு நடிகர் பகத் பாசிலுக்கு உள்ளதை அறிந்து பலரும் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.