இந்தியா, மே 14-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த 'வேட்டையன்' படத்தில்... ரஜினிகாந்தின் காட்சிகள் படமாக்க பட்டுவிட்டதாக தற்போது படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த நிறைவு செய்து விட்டதாக லைகா நிறுவனம், புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஜெய்பீம்' பட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வந்தது. என்கவுண்டர் க்கு எதிராக போராடிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க , பாலிவுட் நடிகர் 'அமிதாப் பச்சன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்ஷன் போன்ற பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
'வேட்டையன்' படத்தின், முதல் கட்ட படபிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில்... பின்னர் தூத்துக்குடி, சென்னை, புதுச்சேரி, ஆதிரா, என பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. அக்டோபர் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாக, தற்போது 'வேட்டையன்' படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. இதில் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழு வழியனுப்பும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் இப்படத்தின் டீசர், ட்ரைலர், ஆடியோ லான்ச் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.