Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சூர்யா முதல் அசோக் செல்வன் வரை; இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் வெப்சீரிஸ், படங்களின் லிஸ்ட்!
சினிமா

சூர்யா முதல் அசோக் செல்வன் வரை; இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் வெப்சீரிஸ், படங்களின் லிஸ்ட்!

Share:

மும்பை, மார்ச் 21 -

மும்பையில் நடந்த நிகழ்வில் அடுத்த ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்களையும் சீரிஸ்களையும் குறித்து அறிவித்திருக்கிறது. பிரபல நடிகர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்தாண்டு மட்டும் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் படங்கள், சீரிஸ் என மொத்தமாக 69 வெளியீடுகளைப் பார்வையாளர்களுக்கு எடுத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் படங்களும் வெப் சீரிஸும் வெளியாகின்றன. அந்த லிஸ்டைப் பார்க்கலாம்.

இந்த வருடம் பல தமிழ் வெப்சீரிஸ்கள் வெளியாகவுள்ளது. அதில் தற்போது ரிலீஸூக்குத் தயாராகி இருப்பது, 'இன்ஸ்பெக்டர் ரிஷி'. தெலுங்கு நடிகராகப் பெரிதும் பரிச்சயமான நடிகர் நவீன் சந்திரா, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிலும் பெரிதாகப் பேசப்பட்டார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கிற தொடர்தான் ' இன்ஸ்பெக்டர் ரிஷி'. இயக்குநர் நந்தினி ஜே.எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் இம்மாதம் 29-ம் தேதி வெளியாகுகிறது. இதுமட்டுமின்றி இவர் நடித்திருக்கிற 'ஸ்நேக் & லாடர்ஸ்' என்ற மற்றொரு தமிழ் வெப்சீரிஸும் இந்தாண்டு வெளியாகிறது. இந்த வெப் சீரிஸில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்புராஜ் பணியாற்றியிருக்கிறார்.

இதன் பிறகு பீரியட் ஆக்‌ஷன் வெப் சீரிஸாக அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'கேங்ஸ் - குருதிபுனல்'. நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங் ஆகியோர் இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸில் செளந்தர்யா ரஜினிகாந்த் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல கடந்த முறை வெற்றி பெற்ற 'சுழல்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் இந்தாண்டு வெளியாகும் எனவும் அமேசான் பிரைம் அறிவித்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு 'சுழல்' வெப் சீரிஸின் முதலாவது சீசனை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தாண்டி சில தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்க ரிலீஸுக்குப் பிறகு வெளியாகவிருக்கின்றன. அந்த வரிசையில் முதலாவதாக இருப்பது சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கிற 'கங்குவா' திரைப்படத்தை வாங்கியுள்ளது அமேசான் பிரைம். இந்த நிகழ்வில் வைத்துதான் 'கங்குவா' திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.

Related News