நடிகை கயல் ஆனந்தி தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஆனந்தி சில தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது ஆனந்தி பிரபாஸின் ராஜா சாப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர். தற்போது கயல் ஆனந்தியும் இணைந்து இருப்பதால் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட போகிறாரா அல்லது கௌரவத் தோற்றமா என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.








