Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நாளை தொடங்கி 'Curry Mee' உள்ளூர் திரையரங்குகளில் திரையிடவுள்ளது
சினிமா

நாளை தொடங்கி 'Curry Mee' உள்ளூர் திரையரங்குகளில் திரையிடவுள்ளது

Share:

நாட்டின் முன்னணி பிரபல கலைஞர் கானா என்றழைக்கப்படும் கானா பிரகாசம் தயாரிப்பில் GV Media Broadcast Sdn Bhd வெளியீட்டில் உருவாகியுள்ள 'Curry Mee' திரைப்படத்தின் முன்னோட்ட விருந்து உபசரிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை Petaling Jaya, Atria - வில் உள்ள MBO திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பின், கலைத்துறையில் சமூதாய கருத்தை விதைப்பதில் பிரசித்துப்பெற்ற கானா உள்ளூர் இரசிகர்களுக்காக சிறப்பான திரைப்படத்தை படைக்கவிருக்கின்றார்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பலமுகங்களை கொண்ட கானாவின் தயாரிப்பில் உருவாகிய இப்படம் தமிழ், சீனம், மலாய் ஆகிய மும்மொழிகளில் ஒரே குடியின் கீழ் சித்தரிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

Kash Villanz இயக்கத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் முன்னணி நடிகர் S.Gana, Ropie Pakodi, Echor Edgar Quah, Nazira Ibrahim, Kavitha Sinhya, Ain Evo, Wong Wei Tian ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.

இரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ''Curry Mee' திரைப்படத்திற்கு மலேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியமான FINAS, இலக்கவியல் உள்ளடக்க நிதியின் வாயிலாக அரசாங்கத்தின் ஆதரவை பெற்று தந்துள்ளது.

நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் உள்ளூர் திரையரங்குகளில் திரையிடப்படவிருக்கிறது.

இந்நிகழ்வில் இப்படத்தின் தயாரிப்பு குழுவினர்கள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News