கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்சுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி
என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து இருந்தனர்.
பின்னர் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) உள்பட 10 ரசிகர்கள் கட் அவுட்டை நிறுத்துவதற்காக தூக்கி சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்களும் அலறி துடித்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஹனமந்த ஹரிஜன், முரளி நடவினமணி, நவீன் காஜி ஆகியோர் பலியானார்கள்.