Dec 20, 2025
Thisaigal NewsYouTube
மலையாள சினிமா நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
சினிமா

மலையாள சினிமா நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

Share:

மலையாள சினிமா நடிகர் ஶ்ரீனிவாசன் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகராக மட்டுமில்லாது திரைக்கதையாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர் நடிகர் ஸ்ரீனிவாசன்.

சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகள் பல பெற்றுள்ளார்.

தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சயமான நடிகராக மாறினார்.

Related News