கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்திவீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்திவீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. '
'பருத்திவீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
'பருத்திவீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது.