Nov 12, 2025
Thisaigal NewsYouTube
சிவாஜி கணேசனின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்
சினிமா

சிவாஜி கணேசனின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்

Share:

அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம்தான் லெனின் பாண்டியன். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க கங்கை அமரன், ரோஜா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் பழம் பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் இப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகன் ஆவார்.

இந்த நிலையில், தற்போது லெனின் பாண்டியன் படத்திலிருந்து தர்ஷன் கணேசன் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Related News