Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஏ.கே 64 படம் குறித்து அதிரடி அப்டேட்
சினிமா

ஏ.கே 64 படம் குறித்து அதிரடி அப்டேட்

Share:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவ்வருடத் தொடக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியானது. இதில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அஜித் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாண்டு இறுதியில் அடுத்த பட வேலைகளில் இறங்குவார் எனத் தெரிகிறது.

குட் பேட் அக்லி பட வெற்றியைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை பிரம்மாண்டமாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பயோவில் ஏ.கே 64 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவு அஜித் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News