பிரியங்கா தேஷ்பாண்டேவைப் பற்றி மக்களுக்குச் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு தொகுப்பாளினியாகக் கலக்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் இவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு கலக்கினார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பிரியங்கா தேஷ்பாண்டே அவ்வப்போது சில பாடல்கள் பாடி தனது பாடல் திறமையைக் காட்டியுள்ளார். Who’s The Hero, வெயிலோடு விளையாடி போன்ற பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.
தற்போது அவர் சினிமாவில் பாடியுள்ள ஒரே ஒரு பாடல் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தின் மூலம் தான் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறர்.
அப்படத்தில் இடம்பெற்ற மதுர பளபளக்குது என்கிற பாடலை நிவாஸ் கே பிரசன்னா, விஜய் சேதுபதி மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் பாடி இருக்கிறாராம்.
அந்த பாடலும் மக்களிடம் சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல் தான். ஆனால் இந்த பாடலுக்கு பிறகு பிரியங்கா தேஷ்பாண்டே எந்த படத்திலும் பாடவில்லை.








