Oct 17, 2025
Thisaigal NewsYouTube
'யாத்திசை' பட இயக்குனருடன் இணைந்தார் நடிகர் சசிகுமார்
சினிமா

'யாத்திசை' பட இயக்குனருடன் இணைந்தார் நடிகர் சசிகுமார்

Share:

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News