ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘வாழை’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர், அரசியல்வாதிகளும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாழை’ படம் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது

மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கை சோறு சாப்பிட விடவில்லை என்று கதறும் போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.









