தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா.
இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்தது.
இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.
எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.