Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ரிலீசுக்கு தயாரான சமுத்திரகனியின் புதிய படம்
சினிமா

ரிலீசுக்கு தயாரான சமுத்திரகனியின் புதிய படம்

Share:

தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற வால்டர் மற்றும் பாரிஸ் ஜெயராஜ் போன்ற வெற்றிப்படங்களை 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர்.

பிரபு திலக் தயாரித்திருந்தார். இவர் தற்போது என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி இருக்கும் 'யாவரும் வல்லவரே' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், பிரபு திலக், "வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து எங்களின் "யாவரும் வல்லவரே" படம் டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது."

Related News