Oct 20, 2025
Thisaigal NewsYouTube
'கோட்' திரைப்படத்தில் கேப்டனுக்கு வாய்ஸ் கொடுத்தவர் இந்த பிரபல நடிகரா?
சினிமா

'கோட்' திரைப்படத்தில் கேப்டனுக்கு வாய்ஸ் கொடுத்தவர் இந்த பிரபல நடிகரா?

Share:

செப்டம்பர் 10-

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் தோன்றும் நிலையில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தது தமிழ் திரை உலகின் பிரபல ஹீரோ என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கோட்’ படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகள் தோன்றும் போது திரையரங்கமே அதிரும் என்பதும் அவரது காட்சியை மிகவும் சிறப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வடிவமைத்து இருந்தார் என்று விமர்சனங்கள் எழுந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் தமிழ் திரையுலகின் இளம் ஹீரோ மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மணிகண்டன் ஏற்கனவே மிமிக்ரி கலைஞர் என்பதும் பல மேடைகளில் அவர் விஜயகாந்த் உட்பட பல பிரபலங்களின் குரல்களில் பேசி உள்ளார் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் மிகவும் பொருத்தமாக அவர் ’கோட்’ திரைப்படத்தின் விஜயகாந்த் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Related News