Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கேம் சேஞ்சரின் முதல் பாடல் நாளை வெளியீடு
சினிமா

கேம் சேஞ்சரின் முதல் பாடல் நாளை வெளியீடு

Share:

நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர் . இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்தார். ஆர்.ஆர்.ஆர் படம் மிகப் பெரிய படமாக அமைந்தது. அந்த படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ஜரகண்டி பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. எக்ஸ் பக்கத்தில் #ஜரகண்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

Related News