நடிகர் விக்ரம் எப்போதும் சவாலான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பவர். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வீர தீர சூரன் படம் வெளியாகி இருந்தது.
அடுத்து விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என அறிவிப்பு அதிகாரபூர்வமாக வந்திருக்கிறது.
சீயான் 63 படத்தை போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குனர் தான் இயக்க போகிறாராம்.
படத்தைத் தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.








