Oct 19, 2025
Thisaigal NewsYouTube
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்
சினிமா

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்

Share:

மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவர் தமிழில் வெளிவந்த சாமி, திருப்பாச்சி. கோ, சகுனி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அனைத்து மொழிகளிலும் சேர்த்து 150 படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார். 80களில் இருந்து நடித்து வரும் அவருக்கு கடந்த 2015ல் பத்மஸ்ரீ விருது அரசு வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக் குறைவு காரணமாக ஜதராபாத்தில் காலமானார்.

கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயது 83 ஆகும். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

Related News