ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த படங்களில் ஒன்று சிவாஜி. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த 2007ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுது. ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் சிறப்பாகப் பார்க்கப்பட்டது தொழில்நுட்ப விஷயங்கள் தான்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க சத்யராஜிடம் தான் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மறுத்துள்ளார்.
அது ஏன் என்பது குறித்து சத்யராஜ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அச்சமயத்தில் என் நிலைமை ரொம்ப மோசமாக போய்க் கொண்டிருந்தது. நாயகனாக ஏதாவது ஒரு படம் வெற்றி அடைந்து விடாதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் நான் வில்லனாக நடித்தால் மொத்தமாக போய் விடும் எனக் கூறினேன். இதுதான் உண்மையான காரணம். ஆனால் வேறு மாதிரியான விஷயங்களை இணையத்தில் எழுதினார்கள் என சத்யராஜ் கூறியுள்ளார்.