மணிரத்னம் காலத்தால் அழிக்க முடியாத சில தரமானப் படங்களைத் தமிழ் சினிமாவிற்குக் கொடுத்தவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் பலரும் படமாக்க முயற்சி செய்து தோற்றுப் போக என்னால் முடியும் எனச் செய்து காட்டியவர்.
அப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் என்ற படத்தைக் கொடுத்தார். கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா என பலர் நடிக்க தயாரான இப்படம் மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை. வசூலும் சாதாரணமாகத்தான் இருந்தது.
தற்போது அப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது.
அண்மையில் மணிரத்னம், விஜய் சேதுபதியிடம் கதை கூறியிருப்பதாகவும் அந்தக் கதை அவருக்குப் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கதை முதலில் சிம்புவிற்குத் தான் சென்றுள்ளது. அவர் அரசன், அஸ்வத் படங்களில் பரபரப்பாக இருப்பதால் விஜய் சேதுபதியிடம் வந்துள்ளது.
அதோடு இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.








