சினிமா துறையில் பிரபலமாக இருப்பவர்களின் வாரிசுகள் நடிகராக வருவது என்பது புதிய விஷயம் அல்ல. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு, அருண் விஜய் என பல முன்னணி நடிகர்களே சினிமாவில் இப்படி வந்தவர்கள் தான்.
தமிழ் சினிமாவில் அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
இயக்குனர் லிங்குசாமி அடுத்து இயக்கும் படத்தில் தான் அவர் ஹீரோவாக நடிக்கிறார். பையா படம் போல இது காதல் கதை தான் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹர்ஷவர்தன் சில வருடங்கள் முன்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தற்போது ஹீரோவாகவும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.