இந்தியா, ஜூலை 4-
மும்பையில் பிறந்து, ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், கோலிவுட் உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பிரபல நடிகை ஜோதிகா.
கடந்த 1974ம் ஆண்டு பிறந்த நடிகை ஜோதிகாவிற்கு வயது 45, கடந்த 1998ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் இவர் கலை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் வெளியான தல அஜித் அவர்களின் "வாலி" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக தமிழில் "பூவெல்லாம் கேட்டுப்பார்", "முகவரி", "தெனாலி" போன்ற பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக மாறினார் நடிகை ஜோதிகா.
பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் துவங்கியது ஜோ மற்றும் சூர்யாவின் காதல் கதை. சுமார் 7 ஆண்டுகள் வளர்ந்த இந்த காதல், கடந்த 2006ம் ஆண்டு திருமணத்தில் சென்று முடிந்தது. இந்த 22 ஆண்டுகளாக இந்த ஜோடி மிகசிறந்த ஜோடிகளாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் என்றே தான் கூறவேண்டும். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
குறிப்பாக பாலிவுட் உலகில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார், அதே நேரம் தனது பிள்ளைகளின் படிப்பை பார்வையிடவும் அவர் மும்பையில் தங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக சூர்யா பல கோடி மதிப்பில் அங்கொரு வீடும் வாங்கினார். ஆனால் இப்பொது அவர் சென்னை வந்தாலும், சூர்யாவினுடைய குடும்பத்தோடு தங்காமல் பிரபல ஹோட்டல் ஒன்றில் தான் ரூம் எடுத்து தங்குவதாக தகவல்களை வெளியிட்டுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன்.
இன்றளவும் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா மிகசிறந்த ஜோடிகளாக திகழ்ந்து வந்தாலும், சூர்யாவின் குடும்பத்தோடு அடிக்கடி ஜோதிகாவிற்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சென்னையில் வந்தாலும் தனியாக தங்குகிறார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








