தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் பணிகளில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.மதுபானம், ஆடைத்துறை, விவசாயம் என பல்வேறு தொழில்களை செய்து வரும் தோனி, திரைத்துறையிலும் செயல்பட்டு வருகிறார். தோனி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரில் பாலிவுட் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சென்னை மீதுள்ள காதலால் தமிழ் துறையிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.தோனியின் தயாரிப்பில் விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிகிறது. இதற்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தோனியின் நிறுவனம், பெரிய பட்ஜெட்டில் அந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
