பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர் விமர்சனங்களையும், உருவக்கேலிகளையும் எதிர்கொண்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர். இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வருடம் பூமி பட்னேகர் நடிப்பில் 3 படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தனக்கு எதிராக
வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து பூமி பட்னேகர் அளித்துள்ள பேட்டியில், "நடிகர்-நடிகைகளை வலைத்தளத்தில் விமர்சிப்பது, கேலி செய்வது சகஜமாகி விட்டது.
பண்டிகை நாட்களில் பாரம்பரிய உடை அணிந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்தால் விமர்சிக்கிறார்கள். சினிமா பட விழாக்களில் வந்ததுபோல் ஏன் உடை அணியவில்லை" என்றார்கள்