Oct 20, 2025
Thisaigal NewsYouTube
யூடியூப்பர் இயக்கத்தில் நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
சினிமா

யூடியூப்பர் இயக்கத்தில் நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Share:

இந்தியா, மே 09-

யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி திரைப்படத்தின் அசத்தல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த நயன்தாரா, அங்கு அட்லீ இயக்கத்தில் உருவான் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகையாக உயர்ந்த நயன்தாராவுக்கு பல்வேறு மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் கைவசம் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்கிற மலையாள படம் உள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதுதவிர பான் இந்தியா படமாக உருவாகும் யாஷின் டாக்ஸிக் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழிலும் நடிகை நயன்தாரா கைவசம் ஒரு படம் உள்ளது. அப்படத்தின் பெயர் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தை புகழ்பெற்ற யூடியூப்பரான டியூடு விக்கி இயக்கி இருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை நடிகை நயன்தாரா மற்றும் மண்ணாங்கட்டி படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related News