தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக் காலமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்தப் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யாவை படக்குழு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹூரோவாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆர்யாவை, வில்லனாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் எனலாம்.