Jan 16, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் வெளியிடப்படும் நடிகர் சூர்யாவின் அஞ்சான்
சினிமா

மீண்டும் வெளியிடப்படும் நடிகர் சூர்யாவின் அஞ்சான்

Share:

சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக கைவசம் ஆர். ஜே. பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 மற்றும் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று அஞ்சான். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். எனினும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இதனால் தமிழகத்தில் இப்படம் தோல்வியைச் சந்தித்தது.

இப்படம் வெளி வந்து கிட்டதட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அஞ்சான் திரைப்படத்தை ரீ எடிட் செய்து வெளியிடப் போவதாக இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Related News