Oct 20, 2025
Thisaigal NewsYouTube
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திருமணம்
சினிமா

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திருமணம்

Share:

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் துவங்கி ஸ்டார்ட் ம்யூசிக் வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய கலகலப்பான பேச்சு , நகைச்சுவையாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லும் விதம் ரசிகர்களைக் கவர்ந்தது என்றே கூறலாம்.

இவருக்காகவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் பலர் உள்ளனர். நேற்று பிரியங்காவிற்கு வசி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்ததுள்ளது. பிரியங்காவின் கணவர் ஒரு பிரபல டிஜே ஆவார்.

நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், விமரிசையாகத் திருமணம் நடந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Related News