நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தான் நடித்து இருக்கும் பராசத்தி படத்தை விளம்பரம் செய்வதில் பரபரப்பாக இருக்கிறார். அந்தப் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுவது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில் மறுநாள் பராசக்தி வெளியாகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் சென்னையில் விபத்தில் சிக்கி இருக்கிறது.
மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் அவரது கார் முன்னாள் சென்ற கார் மீது மோதியதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வந்திருக்கிறது.
இருப்பினும் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் சாலையில் இறங்கி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.








