Jan 16, 2026
Thisaigal NewsYouTube
கலக்கப் போவது யாரு பாலா   நாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார்
சினிமா

கலக்கப் போவது யாரு பாலா நாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார்

Share:

ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவராக பல உதவிகளை வழங்கி வரும் கலக்கப் போவது யாரு பாலா திகழ்கிறார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி தான் இவரது அடையாளம் என்றால் இப்போது இவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். ஓடி ஓடி உழைக்கிறார், அதைவிட வேகமாக யாருக்கெல்லாம் தனது உதவி தேவைப்படுகிறோ அவர்களுக்கு ஓடிப் போய் உதவிகள் செய்கிறார்.

இதெல்லாம் மற்றவர்களிடம் இருந்து பணம் வாங்கி செய்யாமல் தான் உழைக்கும் பணத்தில் செய்து வருகிறார்.

காமெடியனாக, தொகுப்பாளராக, கோமாளியாக என பன்முகம் காட்டிவந்த பாலா இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது முதன்முறையாக நாயகனாக பாலா புதிய படம் நடிக்க உள்ளாராம். ஷெரிப் இயக்கும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் தான் இசையமைக்கிறார்.

Related News